← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 22 / 30
அனைத்து செய்திகள்

கையில் அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் போடும் இளைஞர்கள்!

தூத்துக்குடியில் நடந்து வரும் தொடர் கொலைக் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச செய்திகள்

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம் - ஐடி ஊழியர்கள் தவிப்பு...!

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். மைக்ரோசாப்ட் 365 , அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் கோபிலட் போன்ற முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், பெரு நிறுவனங்களின் அலுவலகப் பணிகள் மற்றும் தினசரி நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

அரசியல்

முதல்வர் சொன்னால்தான் வாய் திறப்பேன்! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்! – வன்னி அரசு கருத்து!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் புகார் குறித்து முதல்வர் சொன்னால் பேசத் தயாராக உள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

தேசிய செய்திகள்

எனது போனை ஒட்டுக் கேட்கிறார் மோடி...!

சமீபத்தில் நடைபெற்ற சமூக வலைதள கலந்துரையாடல் ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைபேசியை டேப் செய்து கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அரசாங்கத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் தனது போனில் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

மம்மூட்டி பேர் போட மாட்டீங்களா? தனுசை வெளுத்த நெட்டிசன்கள்! – வெளியான புதிய போஸ்டர்!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ’ஓம்’ படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்களில் நடிகர் மம்மூட்டியின் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

வானிலை

தமிழ்நாட்டை நோக்கி அடுத்த புயல் வருது! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து, வரும் நவம்பர் 16-ஆம் தேதி சக்திவாய்ந்த புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

மாடலே அள்ளுதே! மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப் போகும் சைக்கிள்!

நடப்பு ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க பிரபலமான ஹீரோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது தமிழக அரசு.

சினிமா

அனிமல் வசூலை முந்திய ராமாயணா...!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. வெளியான வெறும் 8 நாட்களுக்குள்ளாகவே இப்படம் உலகளவில் ரூ. 1,000 கோடி வசூல் என்ற இமாலய இலக்கைத் எட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

உதவித்தொகை தராமல் மாணவர்களை நோகடிக்கும் அரசு! – உதயநிதி கண்டனம்!

உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்காமல் மாணவர்களை இக்கட்டான சூழலுக்கு தவெக அரசு உள்ளாக்கியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா

சீன்-2, ஆவேசம்-2.. உருவாகிறதா ஜித்து சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

தொடர்ந்து ஆவேசம், சீன் என ஹிட் படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன், தனது படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை சேர்த்து ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல்

உதயநிதியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என அறிவிக்க, மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரிய உதயநிதியின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அனைத்து செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக்கேட்ட கணவரை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனைவி உட்பட மூன்று பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.