← முகப்பு

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம் - ஐடி ஊழியர்கள் தவிப்பு...!

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லட்சக்கணக்கான பயனர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். மைக்ரோசாப்ட் 365 , அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் கோபிலட் போன்ற முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், பெரு நிறுவனங்களின் அலுவலகப் பணிகள் மற்றும் தினசரி நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம் - ஐடி ஊழியர்கள் தவிப்பு...!

சேவைகள் முடங்கியதற்கான பின்னணி

சர்வர் கோளாறுகள் மற்றும் மைக்ரோசாப்ட் பரிமாற்றச் சேவையில் ஏற்பட்ட திடீர் இடையூறு காரணமாக இந்த உலகளாவிய முடக்கம் நிகழ்ந்தது. வழக்கமான இணையப் போக்குவரத்து அதிகரிப்பு காரணமல்லாமல், சேவைகளைக் கையாளக் கூடிய சர்வர்களின் எண்ணிக்கை குறைந்ததே இந்தத் தடைக்குக் காரணம் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாமல் திணறினர். மேலும், இண்டெர்நெட் மற்றும் க்ளொவ்ட் (Cloud) சார்ந்த செயலிகள் எதையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முடியாத சூழல் உருவானது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தாக்கம்

இந்தத் தொழில்நுட்பத் தடை இந்தியாவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்களது அலுவல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தும் 'டீம்ஸ்' மற்றும் 'அவுட்லுக்' செயலிகளை அணுக முடியாமல் தவித்தனர். இந்தியா மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகள் இதனால் பாதிக்கப்பட்டன. டவுண்டெக்டர் (Downdetector) போன்ற இணையதளங்களில் பயனர்களிடமிருந்து லட்சக்கணக்கில் புகார்கள் பதிவாகின.

பிரச்சனைகளை சரிசெய்யும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியியல் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சேவைகளைச் சீரமைக்க சர்வர்களின் திறனை உயர்த்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்தச் சேவைத் தடையின் பின்னணியில் எந்தவொரு தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலும் (Malicious Activity) இல்லை என்றும் இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், இந்தச் சேவை முடக்கத்தைக் கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பரவத் தொடங்கின. "இனி மைக்ரோசாஃப்ட் 365 என்பதை மைக்ரோசாஃப்ட் 364 என்று மாற்ற வேண்டும்" எனப் பயனர்கள் இணையத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருவதோடு, இது தொடர்பான விவாதங்களையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.