தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது படிப்படியாக வலுப்பெற்று, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் பருவநிலை விதிகளின்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அகரவரிசையில் பெயர்களைப் பரிந்துரைக்கின்றன.
Reach our readers. Contact us to advertise in this space.
இந்த முறை உருவாகும் புயலுக்கு "அக்வான்" என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இப்பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. பெர்சிய மொழியில் ‘அக்வான்’ என்றால் அரக்கன் அல்லது அசுரன் என்று பொருளாகும்.
புயல் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், கடல் பகுதியில் கடுமையான சீற்றம் காணப்படுவதுடன் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறும், நவம்பர் 16 வரை ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கிழக்குக் கரையோர மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், அக்வான் புயல் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.



