← முகப்பு

மம்மூட்டி பேர் போட மாட்டீங்களா? தனுசை வெளுத்த நெட்டிசன்கள்! – வெளியான புதிய போஸ்டர்!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ’ஓம்’ படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்களில் நடிகர் மம்மூட்டியின் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

மம்மூட்டி பேர் போட மாட்டீங்களா? தனுசை வெளுத்த நெட்டிசன்கள்! – வெளியான புதிய போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஓம்’. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் ஆன நிலையில், படம் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக படத்தின் ப்ரொமோஷன் போஸ்டர்கள் பல வெளியானது. ஆனால் அதில் ’ஓம்’ என்ற படத் தலைப்புடன் தனுஷின் பெயர் மட்டுமே தொடர்ந்து இடம்பெற்று வந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனியர் நடிகரும், மலையாள ஸ்டார் நடிகருமான மம்மூட்டியின் பெயரை போஸ்டரில் போடாதது குறித்து பலரும் தனுஷை விமர்சித்து வந்தனர்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இந்நிலையில் இன்று பட ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாக உள்ளதை தொடர்ந்து அதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் போஸ்டர் மேலேயே பெரிதாக ’மெகாஸ்டார் மம்மூட்டி’ என்று அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா பெயரும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக இந்த பெயர் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.