← முகப்பு

சீன்-2, ஆவேசம்-2.. உருவாகிறதா ஜித்து சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

தொடர்ந்து ஆவேசம், சீன் என ஹிட் படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன், தனது படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை சேர்த்து ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சீன்-2, ஆவேசம்-2.. உருவாகிறதா ஜித்து சினிமாட்டிக் யுனிவர்ஸ்?

மலையாளத்தில் 2023ம் ஆண்டில் வெளியான ரோமாஞ்சம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஜித்து மாதவன். மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த த்ரில்லர் படமானது மலையாளத்தில் பெரும் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து மலையால ஸ்டார் நடிகரான பகத் பாசிலை இயக்கும் வாய்ப்பை பெற்ற ஜித்து மாதவன், ’ஆவேசம்’ படத்தை இயக்கினார். ஆவேசம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பெரிதும் வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்ற ஜித்து மாதவன் ’சீன்’ படத்தை இயக்கினார். இந்த படமும் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்து வருகிறது. ஜித்து மாதவன் தொட்டதெல்லாம் ஹிட்டு என்ற நிலையில் உள்ளார். அதை தொடர்ந்து அடுத்து அவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்தது. மேலும் மலையாள திரையிலகிலும், கோலிவுட்டிலும் சில பெரிய நடிகர்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு ஜித்து மாதவனை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

ஆனால் அதேசமயம் ஜித்து மாதவன் தனது ஹிட் படங்களான ஆவேசம், சீன் படங்களில் உள்ள கதாப்பாத்திரங்களை வைத்து லோகேஷ் கனகராஜ் போல ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவாக்கப் போகிறார் என்றும், ஆவேசம், சீன் படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக்கப் போகிறார் என்றும் பலவிதமான பேச்சுகள் எழுந்தன. சமீபத்தில் இதுகுறித்து கேட்கப்பட்டபோது இது எதுவுமே தனது திட்டத்தில் இல்லை, தனது திட்டமே வேறு என ரூட்டை மாற்றியுள்ளார் ஜித்து மாதவன். தனது முதல் படமான ரோமாஞ்சம் படத்தின் இரண்டாம் பாகமே தற்போது அதிகாரப்பூர்வமாக தான் பணியாற்ற உள்ள படம் என கூறியுள்ள ஜித்து மாதவன், ஆவேசம், சீன் படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக்குவது குறித்து தற்போதைக்கு யோசனை இல்லை என்றும் கூறியுள்ளார்

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.