← முகப்பு

உதவித்தொகை தராமல் மாணவர்களை நோகடிக்கும் அரசு! – உதயநிதி கண்டனம்!

உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்காமல் மாணவர்களை இக்கட்டான சூழலுக்கு தவெக அரசு உள்ளாக்கியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உதவித்தொகை தராமல் மாணவர்களை நோகடிக்கும் அரசு! – உதயநிதி கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் முறையாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் ” நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.