← முகப்பு

மாடலே அள்ளுதே! மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப் போகும் சைக்கிள்!

நடப்பு ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க பிரபலமான ஹீரோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது தமிழக அரசு.

மாடலே அள்ளுதே! மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப் போகும் சைக்கிள்!

தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் இலவச மிதிவண்டிகளை வழங்குவது தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு குறுக்கு கம்பியில்லாத சிறிய சைக்கிள்களும், ஆண்களுக்கு குறுக்கு கம்பி உடைய சாதாரண மாடல் சைக்கிள்களும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது முதலமைச்சராக உள்ள விஜய், மாணவர்களுக்கு நல்ல மாடலில் சைக்கிள்களுடன், ஹெல்மெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவையும் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். அதை தொடர்ந்து மாணவர்களுக்கு சைக்கிள்கள் கொள்முதல் செய்ய நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்ட நிலையில், 9-கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஹீரோ நிறுவனத்திடமிருந்து சைக்கிள்களை வாங்க ஒப்பந்தமாகியுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

மொத்தம் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் விலையில்லா நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. இதில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தப்படி மாணவர்களுக்கான சைக்கிள்களுக்கு ஒரு சைக்கிளுக்கு ரூ.5,260-ம், மாணவிகளுக்கான சைக்கிளில் ஒரு சைக்கிளுக்கு ரூ.5,130-ம் செலவாகும்.

மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் Hero AVIRA 26T மாடல் சைக்கிள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த சைக்கிளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், நவீன மாடல் சைக்கிள்கள் வழங்கப்படுவது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.