← முகப்புதிண்டுக்கல் →

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக்கேட்ட கணவரை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மனைவி உட்பட மூன்று பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவு! இடையூறாக இருந்த கணவர் கொலை! - மனைவி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல், திருமலைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). இவரது மனைவி லாவண்யா (வயது 23). தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில், லாவண்யாவுக்கும், எமக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த துளசிமணி (வயது 28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் கணவர் முத்துக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் தனது மனைவி லாவண்யாவை கடுமையாகக் கண்டித்ததுடன், இந்தத் தவறான உறவைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாவண்யா, தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது கள்ளக்காதலன் துளசிமணியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

அதன்படி, லாவண்யா, துளசிமணி மற்றும் துளசிமணியின் நண்பரான எமக்கலாபுரத்தைச் சேர்ந்த அழகுசின்னு (வயது 43) ஆகிய மூவரும் ஒன்றிணைந்து முத்துக்குமாரை வழிமறித்து கழுத்தை நெரித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நகர் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் காங்கேயன், சுரேஷ், மணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர புலன் விசாரணையில் இறங்கினர்.

சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை உறுதி செய்த தனிப்படையினர், தலைமறைவாக இருந்த லாவண்யா, துளசிமணி மற்றும் அழகுசின்னு ஆகிய மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை முயற்சிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.