← முகப்பு

அனிமல் வசூலை முந்திய ராமாயணா...!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. வெளியான வெறும் 8 நாட்களுக்குள்ளாகவே இப்படம் உலகளவில் ரூ. 1,000 கோடி வசூல் என்ற இமாலய இலக்கைத் எட்டியுள்ளது.

அனிமல் வசூலை முந்திய ராமாயணா...!

தீபாவளி ரிலீஸாக நவம்பர் 5-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது ராமாயாணா பார்ட்-1 திரைப்படம். இப்படம் வெளியானது முதல் சினிமா விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. 2D, 3D, IMAX போன்ற வெர்ஷன்களில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்படுவது, படத்தின் 3D காட்சி அமைப்புகள் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் 3D-யில் தான் இந்தப்படத்தை பார்த்துள்ளனர். கிளைமாக்ஸில் வரும் ஜடாயு கதாப்பாத்திரத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

பான் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ள இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்திய சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ள விஷயம் என்னவென்றால், இப்படம் திரையரங்குகளில் ஓடிய அனைத்து நாட்களிலும் தலா ரூ.100 கோடி வசூலை பெற்று வருகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை இப்படி ஒரு வசூல் சாதனையை எந்த திரைப்படமும் நிகழ்த்தியது இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

சரியாக படம் வெளியாகி இன்றோடு 8 நாட்கள் ஆகும் நிலையில், இப்படம் தற்போது 1000 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்தியத் திரையுலகில் இந்த மைல்கல்லை எட்டிய 11-வது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதோடு, மிகக் குறைந்த நாட்களில் இந்தச் சாதனையைப் படைத்த பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான ஷாருக்கானின் 'பதான்' மற்றும் ரன்பீர் கபூரின் 'அனிமல்' படங்களின் மொத்த வாழ்நாள் வசூல் சாதனையை இப்படம் வெறும் 8 நாட்களில் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வசூல் விபரங்கள்

இந்திய நெட் வசூல் : ரூ. 564.60 கோடி (மொத்த இந்திய கிராஸ்: ரூ. 675.05 கோடி) வெளிநாட்டு வசூல் : ரூ. 358.50 கோடி உலகளாவிய மொத்த வசூல்: ரூ. 1,033.55 கோடி

குறிப்பாக, முதல் வாரத்தின் தீபாவளி பண்டிகை நாட்களில் படத்தின் வசூல் தாறுமாறாக உயர்ந்தது. ஐந்தாம் நாள் திங்கட்கிழமை அன்று மட்டும் படம் ரூ. 107.50 கோடி நெட் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியில் இந்தி பதிப்பு ரூ. 437 கோடியைத் தாண்டி பங்களித்துள்ள நிலையில், கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய பிற மொழி சந்தைகளிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி தியோல் மற்றும் சன்னி தியோல் போன்ற முன்னணி நடிகர்களின் பங்கு குறித்தான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.