← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 20 / 30
அனைத்து செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்! எங்கெல்லாம் மழை? – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் நிலையில் நவம்பர் 16ம் தேதியளவில் அது புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசியல்

மீண்டும் திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை! அனுமதி மறுக்கிறதா தவெக அரசு?

திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருப்பது இந்துக்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

ஆசிரியர் பக்கம்

வீட்டில் புதைக்கப்பட்ட சிறுமிகளின் சடலங்கள்? - ஜெம் வீரமணி வழக்கில் பேரதிர்ச்சி!

சென்னையை உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், தற்போது மேலும் பல திடுக்கிடும் திருப்பங்களும் பேரதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர் மீது ஏற்கனவே சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது ராயப்பேட்டை வீட்டின் பின்புறத்தில் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து செய்திகள்

திருவாரூரில் போதைப்பொருள் விற்பனைக்கு 'செக்'; வானிலிருந்து கண்காணிக்கும் போலீஸ்!

முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் குற்றச்செயல்களைத் தடுக்க போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல்

மதுரையில் புகாரளிக்க சென்றவர் தற்கொலை? காவல் மரணமா? – அரசியல் தலைவர்கள் கேள்வி!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற நபர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாமக அன்புமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் செல்ல கட்டணமில்லா பேருந்துகள்! – அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் செல்வதற்காக பக்தர்களுக்கு கட்டணமில்லா மினிபஸ் சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

விளையாட்டு

'டக் அவுட்' லயும் கோலி தான் கிங்கு! - மேட் ஹென்றியின் தரமான செய்கை!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேட் ஹென்றியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு நடையை கட்டினர்.

அனைத்து செய்திகள்

இ-ஹப் முறைக்கு எதிராகப் போர்க்கொடி...திருவள்ளூரில் திரண்ட ஆவண எழுத்தர்கள்!

பதிவுத்துறையில் கொண்டுவரப்பட உள்ள இ-ஹப் (E-HUB) முறைக்கு எதிராக, திருவள்ளூர் மற்றும் மணவாளநகரில் இரண்டாவது நாளாக ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட பதிவுத்துறை சார்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சினிமா

சிவாஜி கூட கம்பேர் பண்ணா அவ்ளோதான் பாத்துக்க! – வாட்டர்மெலன் ஸ்டாரை எச்சரித்த சேரன்!

இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ள வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அடிக்கடி நடிகர் சிவாஜியை ஒப்புமைப்படுத்தி பேசுவது குறித்து இயக்குனர் சேரன் நேரடியாகவே அவரைக் கண்டித்துள்ளார்.

அனைத்து செய்திகள்

யார் கண்டிச்சாலும் ’ஐ டோண்ட் கேர்’; அணையை கட்டியே தீருவேன்! – கர்நாடக முதல்வர் பிடிவாதம்!

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என அவர் உறுதியாக பேசியுள்ளார்.

தேசிய செய்திகள்

மிடில் கிளாஸுக்கு விமானப் பயணம் இனி கனவே? - டிக்கெட் விலை எகிறிடுச்சு!

பண்டிகைக் காலம் மற்றும் வரவிருக்கும் திருமண சீசனை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணங்கள் சுமார் 50 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. விமான நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

திருவண்ணாமலை to திருப்பதி! ஓம் ட்ரெய்லர்ல இத கவனிச்சீங்களா? – OM Trailer Breakdown!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ’ஓம்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதன் கதை என்ன? அதில் குறிப்பிடப்பட்டுள்ள Decoding விஷயங்கள் போன்றவை ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளன.