← முகப்பு

முதல்வர் சொன்னால்தான் வாய் திறப்பேன்! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்! – வன்னி அரசு கருத்து!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் புகார் குறித்து முதல்வர் சொன்னால் பேசத் தயாராக உள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

முதல்வர் சொன்னால்தான் வாய் திறப்பேன்! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்! – வன்னி அரசு கருத்து!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ, அம்மாவட்ட பெண் மாவட்ட ஆட்சியருக்கு குடிபோதையில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், எதிர்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். ஆனால் தான் அவ்வாறாக எந்த தவறான குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என தவெக எம்.எல்.ஏ கூறினார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் இந்த விவகாரம் குறித்து விசாரித்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எந்த தரப்பிலும் அதிகாரப்பூர்வ புகார்கள் இல்லாத நிலையில் இந்த சம்பவம் மற்ற கட்சியினரால் பெரிதுப்படுத்திக் காட்டப்படுவதாக தவெகவினர் கூறி வருகின்றனர்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இந்நிலையில்தான் இன்று குழந்தைகள் தினத்திற்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியரும், சமூகநீதி அமைச்சர் வன்னி அரசும் கலந்துக் கொண்டனர். இருவரும் பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் வழங்கி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மட்டும் நிகழ்ச்சி முடியும் முன்னரே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வன்னி அரசிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம் குறித்து வன்னி அரசு பேசினாரா என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் வன்னி அரசு ”பெண் ஆட்சியர் மீது அவதூறு பரப்புவதும், அவர்களின் ஒழுக்கத்தை விமர்சித்து பேசுவதும் தவறான விஷயம். பெண்களுக்கு எதிரான தவறான செய்திகளை பரப்புவது, அச்சுறுத்துவது தவறான செயல். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற எந்த பாகுபாடுமின்றி நேர்மையாக செயல்படுகிறார் ஆட்சியர். பொது வாழ்க்கையில் உள்ள பெண்களை காப்பது அரசின் பொறுப்பு. நீதியின் பக்கம்தான் விசிக என்றுமே நிற்கும். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கைக் கொடுங்கள் என முதல்வர் என்னிடம் சொன்னால் கண்டிப்பாக இதுகுறித்து நான் பேசுவேன்” எனக் கூறியுள்ளார்.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.