← முகப்பு
அண்மைச் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பக்கம் 3 / 9
சமீபத்திய செய்திகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடரும் அவலங்கள்! பணம் கேட்பதாகப் புகார்

மதுரை நவ.19 : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சேவைகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துச் செல்வதற்குக்கூட ஊழியர்கள் பணம் கேட்பதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் நிலவும் கொசுத் தொல்லை, தூய்மைக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகள்

“தல தோனிக்கு நீண்ட ஆயுள் வேண்டும்!” – மதுரையில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு வழிபாடு

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்காக மதுரையில் அவரது ரசிகர்கள் நடத்திய சிறப்புப் பிரார்த்தனை கவனம் ஈர்த்துள்ளது. தோனி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வேண்டி, அவரது புகைப்படம் மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கிணற்றில் பிணமாக மீட்கபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்சமீபத்திய செய்திகள்

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகள் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் 5 பேர் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம்

கூகுள் மேப்ஸுக்கு போட்டியாக இறங்கிய ஆப்பிளின் அதிரடி அப்டேட்!

இந்தியாவுக்காக மேம்படுத்தப்பட்ட புதிய Apple Maps சேவையை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. துல்லியமான வழிகாட்டுதல், 3D அடையாளச் சின்னங்கள், தமிழ் உள்ளிட்ட 11 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, தெருக்களை நேரடியாகப் பார்ப்பதற்கான Look Around வசதி எனப் பல புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தப் புதிய அப்டேட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் பயனர்கள் பெறும் வசதிகள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

ராமநாதபுரம் அருகே டெங்குவுக்கு பலியான 4 வயது குழந்தை!

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில், சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தாலும், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்காலும் 4 வயது பச்சிளம் குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

கார்த்திகை தீபம்! திருவண்ணாமலை போறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவில் பக்தர்களுக்கான நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: உயர் நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் செல்லும் கிராம மக்கள்.அனைத்து செய்திகள்

ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட சாலை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.