← முகப்பு

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: உயர் நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்: உயர் நீதிமன்றத்தை நாடிய அதிமுக!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் அனுமதியின்றி அவரது வீட்டுக்குள் நுழைந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக தரப்பினர் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம், ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு

இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி திரிசூலி, ஏற்கெனவே டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள அவர், அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற விசாரணைக்கு எதிர்பார்ப்பு

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது அதிமுகவும் நீதிமன்றத்தை நாடியிருப்பது இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மனு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவு மற்றும் காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !