← முகப்பு

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

பீகாரில்  பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி நகைகள் கொள்ளை!

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டம் பெட்டியாவில் உள்ள சென்கோ ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்குள், புதன்கிழமை மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அதிரடியாகப் புகுந்தது. துப்பாக்கிகளை காட்டி கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டிய கொள்ளையர்கள், அனைவரின் கைகளையும் கட்டிப்போட்டு ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர்.

மேலும், யாரும் போலீசாரைத் தொடர்புகொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களது செல்போன்களையும் பறித்துள்ளனர். இதையடுத்து கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை மூட்டை கட்டிக் கொள்ளையடித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்தச் சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் தாக்கியதில் இரண்டு பேர் தலையில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. கடைக்குள் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், கொள்ளையர்கள் தாங்கள் மீண்டும் வருவோம் என்றும், இது ஒரு திரைப்படத்தின் பகுதி என்றும் தொடர்ந்து கூறியதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டிஐஜி ஹர்கிஷோர் ராய், எஸ்பி குமார் கவுதம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தற்போது அப்பகுதியைச் சுற்றிவளைத்துள்ள போலீசார், கடை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.40 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !