← முகப்புமதுரை →

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!

மதுரை நவ. 19 : மதுரையின் வரலாற்றுப் பெருமையையும், நாயக்கர் மன்னர்களின் கட்டிடக்கலைத் திறனையும் பறைசாற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாகப் பார்வையிட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நவம்பர் 19 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதன்படி, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எவ்வித நுழைவுக் கட்டணமும் இன்றி மஹாலைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் மஹால், அதன் பிரம்மாண்டமான தூண்கள், அழகிய வளைவுகள், கலைநயமிக்க கட்டிட அமைப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புகளால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

குறிப்பாக, பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தை நேரில் கண்டு ரசிக்க விரும்புவோருக்கு இந்த இலவச அனுமதி சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனவே, மதுரை மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருமலை நாயக்கர் மஹாலின் வரலாற்றுப் பெருமையையும் கட்டிடக்கலை அழகையும் இலவசமாகக் கண்டு ரசிக்கலாம்!

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !