நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், தொடரின் மிக முக்கியமான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று (நவம்பர் 13) நியூசிலாந்தின் மவுன்ட் மவுன் கனுய் நகரில் உள்ள புகழ்பெற்ற பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து.
கில்-க்கு பதிலாக ஸ்ரேயஸ்
Buy Now ! Pay Daily !
வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான சிறப்புப் பயிற்சிகளுக்காக இந்திய அணியின் வழக்கமான கேப்டன் சுப்மன் கில் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை ஷ்ரேயஸ் ஐயர் தனது கிரிகெட் கேரியரில் முதல் முறையாக ஏற்றுக் கொண்டார். டாஸ் வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் துணை கேப்டனாக இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர்.
நழுவிய வாய்ப்புகள்
முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் டிச் செய்பர்ட் ஜோடி மிகச் சிறப்பானதொரு ஒப்பனிங்கை அமைத்துக் கொடுத்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய அகிப் நபியின் ஐந்தாவது பந்தில் வில் யங் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப் பகுதியில் நின்ற ரோகித் சர்மா கோட்டை விட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே யங் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் நழுவவிட, வில் யங் வெறும் 5 ரன்களில் இருந்தபோது இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

வில் யங்கின் அபார சதம்
அதிரடியாக ஆடிய செய்பர்ட் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 58 ரன்களை விளாசினார். நிக் கெல்லி (4 ரன்கள்) மற்றும் டீன் பாக்ஸ்கிராப்ட் (8 ரன்கள்) நிலைக்கவில்லை. குல்தீப் யாதவ் வீசிய 26வது ஓவரில் வில் யங்கும் ஃபின் ஆலனும் இணைந்து மைதானத்தின் நாலாபுறமும் அடித்து நொறுக்கி 19 ரன்களைச் சேர்த்தனர். ஆலன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப்பின் பந்தில் ஒரு ரன் எடுத்ததன் மூலம் வில் யங் தனது சதத்தை (88 பந்துகளில்) பூர்த்தி செய்தார். இறுதியில் நமன் திர் பந்துவீச்சில் ஆட்டமிழக்கும்போது அவர் 108 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 125 ரன்கள் குவித்திருந்தார்.
அதிரடி ஃபினிசிங்
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் (24 ரன்கள்) மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் (22 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அகிப் நபி, குர்னுார் பிரார் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மாட் ஹென்றியின் விக்கெட் வேட்டை
334 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியின் அதிரடி பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே தலைகீழாகச் சரிந்தது.
இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய மாட் ஹென்றி முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மாவை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து அந்த ஓவரின் 5வது பந்தில் நட்சத்திர வீரர் விராட் கோலியை (0) போல்டாக்கிய அவர், 6வது பந்திலேயே புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரையும் எல்.பி.டபிள்யு முறைப்படி 'கோல்டன் டக்' அவுட்டாக்கினார். முதல் ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி ரன் ஏதுமின்றி 0/3 எனப் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் பொறுப்பற்ற முறையிலும் பேட்டிங் நுணுக்கங்கள் தெரியாதது போலவும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (5 ரன்கள்), அக்சர் படேல் (21 ரன்கள்) ஏமாற்றமளித்தனர். ஹென்றியின் பந்துவீச்சில் இஷான் கிஷான் (27 ரன்கள்) போல்டானார். நமன் திர் 21 ரன்கள் சேர்த்தார். குர்னுார் பிராரை (2 ரன்கள்) போல்டாக்கிய மாட் ஹென்றி தனது 6வது விக்கெட்டைப் பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி வெறும் 26.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்குச் சுருண்டதுடன், 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மாட் ஹென்றி மிகத் துல்லியமாகப் பந்துவீசி 9.4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 27 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்குக் முக்கியக் காரணமாக விளங்கினார். பிஷ்சர் 3 விக்கெட்டுகளையும், கைமீசன் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதுவரை இந்தியா வைத்துள்ள மோசமான ரெக்கார்ட்ஸ்
- ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரன்கள் அடிப்படையில் இந்திய அணி சந்தித்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தோல்வி இதுவாகும் (244 ரன்கள் வித்தியாசத்தில்). இதற்கு முன்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இலங்கைக்கு எதிராக 245 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே முதலிடத்தில் உள்ளது.
- ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பதிவு செய்த 6வது குறைந்தபட்ச ஸ்கோர் (89 ரன்கள்) இதுவாகும். (இதன் முதலிடத்தில் 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஷார்ஜாவில் எடுத்த 54 ரன்கள் உள்ளது).
- ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக ரன் எடுப்பதற்கு முன்பாகவே முதல் 3 விக்கெட்டுகளை (0/3) இழந்தது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இத்தகைய நிகழ்வு அரங்கேறுவது இது ஐந்தாவது முறையாகும்.
கோலியின் அடுத்த சாதனை
- ஒரு போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 'டக்' (Duck) முறையில் ஆட்டமிழப்பது இதுவே இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தம்புலாவில் இலங்கைக்கு எதிராக இருவரும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டக்' அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் 20 முறை என்கிற கணக்குடன் சச்சின் டெண்டுல்கருடன் முதலிடத்தை விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுக்கு முன்னாடியே மான்செஸ்டர்ல நட்ந்திருக்கு
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் (மான்செஸ்டர் மைதானத்தில்) நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3.1 ஓவர்களில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியதை இந்தப் போட்டி பலருக்கும் கண்முன்னே கொண்டுவந்தது. அன்றும் மாட் ஹென்றி பந்துவீச்சில் ரோகித் (1), ராகுல் (1) மற்றும் போல்ட் பந்தில் கோலி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். தற்போதும் அதேபோன்று மாட் ஹென்றி மிரட்ட, இந்தியா முதல் ஓவரில் ரன் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து வரலாற்று மோசமான சாதனையைப் படைத்தது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கருத்து
"நாம் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம் என்பது இங்கு முக்கியமல்ல; மாறாக, அணியின் பேட்டிங் வெறும் 26.4 ஓவர்களில் சுருண்டுபோனதுதான் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. வில் யங் கொடுத்த இரண்டு எளிய 'கேட்ச்' வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டது ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மோசமான நாள் நம்மை விட்டு கடந்து செல்லட்டும். இது போன்ற தோல்விகள் நமது அனுபவமில்லாத இளம் பவுலர்களுக்குச் சிறந்ததொரு பாடமாக அமையும். இஷானுடன் ஒப்பிடுகையில் ருதுராஜ் கூடுதல் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் தான் ரோகித்துடன் ருதுராஜை தொடக்க வீரராகக் களமிறக்கினோம். இதுபோன்ற ஆட்டங்கள் வீரர்களுக்கு மிகுந்த வேதனையைத் தரும், இருப்பினும் நாங்கள் மிகவும் வலிமையாக மீண்டு வருவோம்" என்றார்.
தோல்வி குறித்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்.
"இரு இன்னிங்ஸ்களுக்கு இடையே ஆடுகளத்தின் தன்மையில் மிகப்பெரிய மாற்றத்தை எங்களால் காணமுடிந்தது. நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தபோது ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதனால் 334 ரன்கள் இலக்கை எளிதில் சேஸ் செய்துவிடலாம் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகின. இதனால் பேட் செய்வது மிகவும் கடினமாக மாறியது. கேட்ச்களை நழுவவிடுவது விளையாட்டில் சகஜம்தான். நாங்கள் இந்த மோசமான போட்டியை விரைவில் மறந்துவிட்டு, முதல் இரண்டு போட்டிகளில் வென்ற வெற்றியை ஊக்கமாக எடுத்துக்கொண்டு, வரவிருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வோம்" என்றார்.
இரு அணிகளுக்கும் இடையேயான தொடரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.






