← முகப்பு

திருவண்ணாமலை to திருப்பதி! ஓம் ட்ரெய்லர்ல இத கவனிச்சீங்களா? – OM Trailer Breakdown!

தனுஷ் நடித்து வெளியாகவுள்ள ’ஓம்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதன் கதை என்ன? அதில் குறிப்பிடப்பட்டுள்ள Decoding விஷயங்கள் போன்றவை ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளன.

திருவண்ணாமலை to திருப்பதி! ஓம் ட்ரெய்லர்ல இத கவனிச்சீங்களா? – OM Trailer Breakdown!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள படம் ’ஓம்’. இந்த படத்தில் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் பெறும் நிலையில் பட டைட்டில் இந்துக்களின் புனித வார்த்தையான ’ஓம்’ என்ற பெயரில் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து OM என்ற எழுத்துக்கு நடுவே புள்ளி வைத்து O.M (Operation Mole) என பெயரை மாற்றி சான்றிதழ் பெற்றுள்ளது படக்குழு. அதை தொடர்ந்து நேற்று ஓம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரிலேயே இரண்டு ஆன்மீக நகரங்களுக்கிடையே நடக்கும் கதை என குறிப்பிடப்படுவதன் மூலம் இந்த கதை திருவண்ணாமலை-திருப்பதி இடையே நடக்கும் கதை என தெரிகிறது. திருவண்ணாமலை சிவனுக்குரிய தலம் என்பதும், திருப்பதி விஷ்ணு பெருமாளுக்குரிய தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் செம்மரக் கடத்தல் மையமாக உள்ளது ட்ரெய்லர் மூலமாக தெரிகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

Om Sai pallavi
Om Sai pallavi

ட்ரெய்லர் வகையில் உத்தேசமான கதையாக ரசிகர்கள் பேசிக் கொள்ளும் கதை இதுதான். திருப்பதியிலிருந்து ஒரு கும்பல் செம்மரக் கட்டைகளை கடத்தி வருகிறது. அதன் தலைவனாக சியா (மம்மூட்டி) என்பவர் செயல்பட்டு வருகிறார். அவர்கள் செம்மரம் கடத்தும் வழிமுறையை கண்டுபிடித்து அவர்களை பிடிக்க ஒரு சீக்ரெட் ஆபரேஷன் (Operation Mole) மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலையை சேர்ந்த தனுஷ் செம்மரம் கடத்துவதில் உதவுவது போல சியா குழுவிற்குள் நுழைகிறார்.

ஒரு கட்டத்தில் சியாவின் நடவடிக்கைகளில் உள்ள நியாயம் தனுஷிற்கு புரிய வரும்போது சியாவை Task Force கொல்லும் சூழல் உருவாகிறது. அதேபோல இந்த குற்ற பின்னணி எதுவும் தெரியாமல் மரம் வெட்டுவதற்காக அழைத்து வரப்படும் தமிழக கூலியாட்களும் Task Force-டம் சிக்கி விடுகிறார்கள். அவர்கள் கொல்லப்பட உள்ள நிலையில் சீக்ரெட் ஏஜெண்டாக சென்ற தனுஷ் Task Force-க்கு எதிரானவராகவே மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர் என்ன முடிவு எடுத்தார். அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பது போல கதை செல்கிறது என்பது ட்ரெய்லர் மூலமாக கிடைத்துள்ள யூகமான கதையாக உள்ளது.

ட்ரெய்லர் முழுவதும் பல இடங்களில் சிவன் குறித்த ரெபரென்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தனுஷின் தனிப்பட சிவ பக்தியை ரெபெரென்ஸ் செய்யும் விதமாக அமைந்துள்ளது. செம்மரக் கடத்தல், அதை ட்ராக் செய்து வரும் சிறப்பு படை என புஷ்பா பாணி காட்சிகளும், ரகசிய உளவாளியாக சென்று கடைசியில் அந்த குற்றக் கும்பலின் தலைவனாகவே மாறுவது போன்ற துரந்தர் பாணியும் கலந்து இந்த ஓம் படத்தில் தெரிந்தாலும் தனுஷ் படமாக இது எவ்வாறு தனித்து அதன் கதையோட்டத்தில் பயணிக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !