திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் கண்காணிப்பு இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக, முத்துப்பேட்டை டி.எஸ்.பி. தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Buy Now ! Pay Daily !
குறிப்பாக, ட்ரோன் கேமரா மூலம் வான்வழிக் கண்காணிப்பு மேற்கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், ஆள் நடமாட்டம் குறைவான இடங்கள் மற்றும் குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, முத்துப்பேட்டை ஆசாத் நகர், ஆலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும், ட்ரோன் கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முத்துப்பேட்டை பகுதியில் போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






