← முகப்புதிருவள்ளூர் →

இ-ஹப் முறைக்கு எதிராகப் போர்க்கொடி...திருவள்ளூரில் திரண்ட ஆவண எழுத்தர்கள்!

பதிவுத்துறையில் கொண்டுவரப்பட உள்ள இ-ஹப் (E-HUB) முறைக்கு எதிராக, திருவள்ளூர் மற்றும் மணவாளநகரில் இரண்டாவது நாளாக ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட பதிவுத்துறை சார்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ-ஹப் முறைக்கு எதிராகப் போர்க்கொடி...திருவள்ளூரில் திரண்ட ஆவண எழுத்தர்கள்!

தமிழகம் முழுவதும் இ-ஹப் முறைக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் இரண்டாவது நாளான இன்று திருவள்ளூர் மற்றும் மணவாளநகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆவண எழுத்தர்கள், தட்டச்சர்கள், டி.டி.பி. உரிமையாளர்கள், ஆவண எழுத்து உதவியாளர்கள் மற்றும் பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் செய்து வரும் பல்வேறு தரப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.அப்போது, இ-ஹப் முறைக்கு எதிராகவும், தங்களது தொழில் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், பதிவுத்துறையை நவீனமயமாக்குவதற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், புதிய திட்டத்தின் மூலம் ஏற்கனவே இத்துறையை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தொழில்நுட்ப மாற்றங்களை நடைமுறைப்படுத்தும்போது தங்களைப் போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.இந்தப் போராட்டம் குறித்து பத்திர விற்பனையாளர் ஹேமகுமார் கருத்துத் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !