திருப்பத்தூர்திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர்திருப்பத்தூர் மக்களே உஷார்..கூலித் தொழிலாளி கணக்கில் பல கோடி பேலன்ஸ்!
ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களைத் தொடங்கி, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் மோசடி கும்பல் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர்கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி! தவறி விழுந்து உயிரிழந்தாரா?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணின் நகை மாயம்!
குடும்ப கஷ்டத்திற்காக நகையை அடகு வைப்பதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் ஒரு சவரன் தங்க நகை காணாமல் போனதால் பேருந்து நிலையத்திலேயே பெண் கதறி அழுத சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்திருப்பத்தூர் அருகே இரட்டை படுகொலை! அதிர்ச்சி சம்பவம்!
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட்டில் காரில் வந்த ஆண், பெண் ஆகிய இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்எக்ஸ்.எல் வாகனங்கள்தான் டார்கெட்.. சிக்கிய பலே திருடன்!
வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து டிவிஎஸ் எக்ஸ். எல் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர்"டெங்கு அபாயம்!" – திருப்பத்தூர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் ஆம்பூர் மற்றும் மாதனூர் பகுதிகளில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா?
சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால், கடத்தல்காரர்கள் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த பொதுமக்கள்!
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண்ணுக்கு பொதுமக்கள் உதவியால் பிரசவம் பார்க்கப்பட்டது.
திருப்பத்தூர்மாவட்ட நூலக மையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!
‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகப் புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள மாவட்ட நூலக மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்விலைவாசியைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆட்சி கவிழும்: கே.சி.வீரமணி எச்சரிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
திருப்பத்தூர்திஷா கமிட்டி இந்தியா முழுவதும் பிணவரைப் போல் செயல்படுகிறது! - திமுக. எம்.பி கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி கதிர் ஆனந்த் திஷா கமிட்டி இந்தியா முழுவதும் பிணவரைப் போல் செயல்படுவதாகவும்,மாவட்ட அளவிலான அதிகாரிகள் வருவதில்லை தொடர் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே வருவதாக குற்றச்சாட்டு முன்வைத்து பேசினார்.