திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐசக் என்கிற பூவரசன் (29), இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 மாத கைக்குழந்தை உள்ளது. ஐ டி.ஐ படித்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை பொது சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பணிக்கு வந்த பூவரசன் SLUDGE PUMP ROOM ல் இரவு பணியில் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை யாரும் பார்க்காத நிலையில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் காலை பணிமாற்றம் செய்ய பணிக்கு வந்த நபர் பூவரசனை தேடிய போது அங்கு பூவரசன் இல்லாததால் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை பின்னர் கழிவுநீர் தொட்டியில் பார்க்கும் போது கை மட்டும் வெளியே தெரிந்த நிலையில் பூவரசன் சடலமாக இருப்பது தெரியவந்தது. பூவரசன் உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்திற்கும், வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினருடன் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட முயன்ற போது அங்கு கூடியிருந்த பூவரசனின் உறவினர்கள் மீட்பு பணிகளை தடுத்து நிறுத்தி பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த தொழிலாளியின் இறப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை சடலத்தை மீட்க கூடாது என்று கூறி இறந்தவரின் உறவினர்கள் சடலதை மீட்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் உயிரிழந்த பூவரசனின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த பூவரசனின் உறவினர்கள் இடம் பேச்சு வார்த்தை நடத்தி பூவரசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பூவரசனின் சடலத்தை மீட்ட போது அவர் தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் இரு குறித்து கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பம்பு ஆப்ரேட்டராக வேலை செய்யும் பூவரசன் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்து உயிரிழந்தது எப்படி? அவர் ஏதேனும் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய முயன்ற போது தலையில் காயம் ஏற்பட்டு மயக்கி விழுந்த போது கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தரா? அல்லது பணியின் போது விஷ வாயு தாக்கியதால் தொட்டியில் விழுந்து உயிரிழந்தாரா? என்ற முழு விவரமும் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும்.
இருப்பினும் இது போன்று தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? உள்ளிட்டவற்றை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.






