← முகப்புதிருப்பத்தூர் →

எக்ஸ்.எல் வாகனங்கள்தான் டார்கெட்.. சிக்கிய பலே திருடன்!

வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனங்கள் திருடப்பட்டு வந்த நிலையில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து டிவிஎஸ் எக்ஸ். எல் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட எக்ஸ். எல் ராமு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், முனீஸ்வரன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதில், அவர் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (40) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக வாணியம்பாடி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருபவர்களைக் கண்காணித்து, டிவிஎஸ் எக்ஸ்.எல் வாகனங்களை மட்டும் குறிவைத்துத் திருடி வந்ததும் விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 9 டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !