← முகப்புதிருப்பத்தூர் →

பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் அச்சுறுத்தல் -மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலை அருகே, அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அப்போது 18 வயதைத் தாண்டிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இயல்பாகவே வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்றும், ஆனால் 13 கோடி இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்மேலும் பெட்ரோல் விலை குறித்துப் பேசிய அவர், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107 எனக் கூறப்பட்டாலும், அதன் உண்மையான விலை ரூ.169 எனக் குறிப்பிட்டார்.

மக்கள் வாங்கும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.73-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டபோது எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் எத்தனால் கலந்த பெட்ரோலை ரூ.107-க்கு விற்பனை செய்வதாகவும் விமர்சித்தார்.

இதன் மூலம் மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோ தங்கராஜ், சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆன பிறகும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவை முழுமையாக எட்டப்படவில்லை என்றார்.

ஒரு மனிதன் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் கிடைத்துள்ளனவா என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில் என்றும், இன்றும் பல கோடி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !