← முகப்புதிருப்பத்தூர் →

பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா?

சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால், கடத்தல்காரர்கள் அவற்றை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா?

சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் பயணிகள் ரயில்களில் அவ்வப்போது ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் பெங்களூரு நோக்கிச் செல்லும் பயணிகள் ரயிலில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தப்படுவதை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்வதைக் கண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில் நிலையத்திலேயே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

ரயில் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள்
ரயில் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள்
Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி, இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பட்டப்பகலிலேயே ரயில் நிலையத்தில் மூட்டைகளைக் கொண்டு வந்து பயணிகள் ரயிலில் ஏற்றும் அளவிற்கு கடத்தல் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ரயில்களில் நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கவும், கடத்தலில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !