மேற்கு வங்கம் மாநிலம் தாராசுத்தப்பட்டா மாவட்டம் ராமச்சந்திரபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் காசிம் என்பவரின் மனைவி சானியா காதுன் (வயது 25) இவர்களின் குடும்பத்தினர் கர்நாடக மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சானியா காதுன் 2 வது முறையாக கர்ப்பம் ஆனார். இதனையடுத்து பிரசவ நாள் நெருங்கி வந்தததால் வட மாநில குடும்பத்தினர் தங்களின் சொந்த ஊரில் பிரசவம் செய்து கொள்ள அந்த குடும்பத்தினர் நேற்று காலை ரயில் எண்.12864 எஸ் எம் வி டி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூர்- ஹவுரா வரை செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு அன்ரிசர்வ்டு கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது திடிரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அந்தப் பெட்டியில் உள்ள சக பயணிகள் உதவியுடன் பெண்ணுக்கு ரயிலில் சேலை கட்டி அதில் பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Buy Now ! Pay Daily !
இதனையடுத்து சக பயணிகள் ரயில் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரயில் வரும் முன்பே 108 ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் ஜோலார்பேட்டை நிலையம் வந்தடைந்த உடனே மருத்துவ குழுவினர் பிரசவம் பெற்ற தாய் மற்றும் குழந்தையை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் தற்போது தாயும் , சேயும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் .






