திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பசுபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்துப் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு அதிமுக ஆட்சிக்கு வரும் எனப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியானதாகவும், ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தியாகம் செய்து இந்த ஆட்சியைப் பெறவில்லை என்றும் விமர்சித்தார்.
Buy Now ! Pay Daily !
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவியதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு நல்ல ஆட்சி என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சி நடத்தத் தகுதியற்றவர்கள் என்றும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ அரிசி ரூ.35-க்கும், சர்க்கரை ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அரிசி கிலோ ரூ.120 ஆகவும், சர்க்கரை ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறினால், மக்கள் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்றும் கே.சி.வீரமணி எச்சரித்தார்.






