← முகப்புதிருப்பத்தூர் →

திருப்பத்தூர் அருகே இரட்டை படுகொலை! அதிர்ச்சி சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட்டில் காரில் வந்த ஆண், பெண் ஆகிய இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே இரட்டை படுகொலை! அதிர்ச்சி சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய இருவரும் காரில் தனியார் பிளாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இறந்த ஆண் திருவண்ணாமலை பகுதியை சார்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் வந்த பெண் யார் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் , பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !