← முகப்புதிருப்பத்தூர் →

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணின் நகை மாயம்!

குடும்ப கஷ்டத்திற்காக நகையை அடகு வைப்பதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் ஒரு சவரன் தங்க நகை காணாமல் போனதால் பேருந்து நிலையத்திலேயே பெண் கதறி அழுத சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணின் நகை மாயம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மலர். இவர் குடும்ப சூழல் மற்றும் பணம் கஷ்டம் காரணமாக வீட்டில் இருந்த கம்மல் மாட்டல் என சுமார் ஒரு சவரன் தங்க நகையை வாணியம்பாடியில் உள்ள நகை அடகு கடையில் அடகு வைப்பதற்காக வளையாம்பட்டில் இருந்து வாணியம்பாடிக்கு இலவச அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பின்னர் வாணியம்பாடி பேருந்து நிலையம் வந்த உடன் அங்கு இறங்கி தன் பையில் உள்ள நகையை பார்த்த போது பையில் இருந்த ஒரு சவரன் தங்க நகை காணாமல் போதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.அதை தொடர்ந்து நகை காணாமல் போன அதிர்ச்சியில் பேருந்து நிலையத்தில் கத்தி கதரி அழுதுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து விசாரித்த போது தன் நகை காணாமல் போனது குறித்து அவர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

உடனடியாக பொதுமக்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த நகர காவல் உதவி ஆய்வாளர் ரூகன் தலைமையிலான காவல் துறையினர் பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.

அந்த பெண் நகை கொண்டு வந்த பையில் ஒரு ஓட்டை இருந்துள்ளது. எனவே அந்த நகை ஒரு வேளை பேருந்திலேயே விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் அரசு பேருந்து பணிமனைக்கு தொடர்பு கொண்டு அந்த பெண் பயணம் செய்த பேருந்து குறித்தும் பேருந்தில் நகை உள்ளதா? என்று பார்க்கும் படி கூறியுள்ளனர்.

பணிமனையில் இருந்து ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரிடம் விசாரித்த போது பேருந்தில் நகை இல்லை என்று தகவல் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பெண் வீட்டில் இருந்து பேருந்துக்கு செல்ல நடந்து வரும் போது கீழே விழந்திருக்குமா?அல்லது பேருந்தில் யாராவது நகையை எடுத்திருப்பார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !