← முகப்புதிருநெல்வேலி →

முதல்வர் விஜயின் உருவ பொம்மையை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி நெல்லையில் பாஜக - இந்து முன்னணி வழக்கறிஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் விஜயின் உருவ பொம்மையை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாநில அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி, திருநெல்வேலியில் பாஜக மற்றும் இந்து முன்னணி வழக்கறிஞர்கள் சார்பில் இன்று தீவிர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​நீதிமன்ற வளாகம் முன்பாக ஒன்றுதிரண்ட வழக்கறிஞர்கள், தமிழக அரசின் போக்கைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும், இது பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

​போராட்டத்தின் உச்சகட்டமாக, முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையைத் தீயிட்டு எரித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் அரசிற்கு எதிராக ஆவேசமாகக் குரல் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

​வழக்கறிஞர்களின் இந்தத் திடீர் போராட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்புச் சம்பவத்தால் நெல்லை நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !