கடந்த வாரம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது அதேநேரத்தில், மேலும் கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ஆம் தேதி மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவில், திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் நில அளவைக் கல் தூண் என்றும், இதுபோன்ற தூண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில், இன்று தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டார்.
இதனிடையே கார்த்திகை தீபத் திருவிழாவான இன்று, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றச் செல்ல பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டிருந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இன்று அங்கு செல்ல நயினார் நாகேந்திரன் ஆயத்தமாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரனின் இல்லத்தின் முன்பு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும் வீட்டில் திரண்டுள்ளதால் பெருமாள்புரம் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்! இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.






