← முகப்புதிருநெல்வேலி →

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில், தடையை மீறி மதுரை செல்ல முயன்றதாகக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 46 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதங்களும், சட்டப் போராட்டங்களும் நிலவி வருகின்றன.

வழக்கமாக மலைப் பாதையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டனர்.

தடையை மீறிச் செல்ல முயன்ற அவர்களை, திருநெல்வேலி தச்சநல்லூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் தடையை மீறிச் செல்ல முயன்றது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயன்றது உள்ளிட்ட காரணங்களுக்காக, நயினார் நாகேந்திரன் மற்றும் அவருடன் இருந்த 46 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 170-வது பிரிவின் கீழ் தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !