← முகப்புதிருநெல்வேலி →

ஜீன்ஸ் பட பாணியில் மாற்றிச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீன்ஸ் பட பாணியில் மாற்றிச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை!

சுத்தமல்லியில் இருந்து கோபாலசமுத்திரம் செல்லும் மேற்குப் புறவழிச்சாலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற 15 வயது சிறுவன் ரஹீம் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைக்குப் பிறகு, சிறுவனின் இடது காலில் இன்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து சிறுவன் வெளியே வந்தபோது, காயமடைந்த இடது காலுக்குப் பதிலாக, எவ்வித பாதிப்பும் இல்லாத வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உறவினர்கள் மருத்துவர்களிடம் முறையிட்டபோது, கவனக்குறைவால் தவறு நடந்துவிட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, சிறுவனை மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவர்கள், காயமடைந்த இடது காலிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் நோயாளிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !