← முகப்புதிருநெல்வேலி →

நெல்லையில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சுற்றுலாத் திட்டம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஸ் குமார் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

நெல்லையில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சுற்றுலாத் திட்டம்!

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக, மணிமுத்தாறு அணைப் பகுதியில் உணவகம், கழிப்பறைகள், பூங்கா உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

மேலும் இந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வைச் சரிசெய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்புடன் போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைவுபடுத்தி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அறிவுறுத்தினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ரூ.13 கோடியில் நதி சுற்றுலாத் திட்டம்:

கடந்த பட்ஜெட் மானியக் கோரிக்கையில் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளை இணைத்து நதி சுற்றுலா மேம்பாட்டிற்காக சுமார் 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது

இதில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த உடனடியாக அரசாணை பெறப்பட்டு, கள ஆய்வு செய்து பணிகள் துரிதமாகத் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அடுத்த பட்ஜெட்டிற்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

மேலும் நீர்வளத் துறை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சுற்றுலாப் பணிகளை மேற்கொள்ளத் தடையின்மைச் சான்று பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைய, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !