← முகப்புபெரம்பலூர் →

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றம்!

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரம்மரிஷி மலையில் 44-ம் ஆண்டு திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றம்!

ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தரின் அருளாசியுடன் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இவ்விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இருந்து மகா தீபம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, எளம்பலூர் மலை அடிவாரத்தில் உள்ள காகன்ன ஈஸ்வரர் ஆலயம் முன்பு மாதாஜி ரோகினி ராஜ்குமார், தவயோகி சுந்தர மகாலிங்கம் ஆகியோர் மகா தீபத்தை ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 2,500 அடி உயரமுள்ள பிரம்மரிஷி மலையில், ஐந்தரை அடி உயர கொப்பரையில் 2,100 மீட்டர் திரி, 1,008 கிலோ நெய் மற்றும் ஐந்து வகை எண்ணெய், 108 கிலோ பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தவசிநாத சுவாமிகள் தலைமையில் சிவனடியார்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டபடி மகா கார்த்திகை தீபத்தை ஏற்றினர்.

இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண எளம்பலூர், வாலிகண்டபுரம், பெரம்பலூர், கோனேரிபாளையம், சோமண்டாபுதூர், எசனை, ஆலம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.

விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானமும், சாதுக்களுக்கு வஸ்திர தானமும் வழங்கப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !