← முகப்பு

திருவண்ணாமலை மலை உச்சிக்குச் சென்ற தீபக் கொப்பரை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப தரிசனம் நாளை நடைபெற உள்ளது.

இதையொட்டி, இன்று அதிகாலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அந்தக் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மகா தீபம் ஏற்றுவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ நெய் வாங்கப்பட்டுள்ளது. மேலும், மகா தீபத்திற்குத் தேவையான 1,000 மீட்டர் காடா துணியிலான திரியைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

நாளை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கக் கொடிமரம் முன்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். அதே நேரத்தில், அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சியளிக்கும் மகா தீபத்தைப் பக்தர்கள் தரிசிக்கலாம். இந்தத் தீப ஒளி திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு வரை தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !