கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் விஷ்ணு பகவானாகிய பெருமாள் ஆமை உருவில் வந்து சிவபெருமானை வணங்கிய திருதலமாகவும்,தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் பரிகாரத் தலமாகவும், விளங்கி வருவது பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில்.
சிவபெருமானுக்கு உகந்த மாதமாகிய கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் கடை ஞாயிறு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழாவை யொட்டி காஞ்சிபுரம் சுற்று வட்டாரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து தலை சம்பந்தமான காது, மூக்கு தொண்டை,கண் நோய்களை தீர்க்க வேண்டி மண்பாண்டத்தில் மாவிளக்கு ஏற்றி தலையில் வைத்து கொண்டு கோவில் வளாகத்தில் சுற்றி வந்து கச்சபேஸ்வரர் சுவாமியை தரிசித்து, வணங்கி வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Buy Now ! Pay Daily !
கடை ஞாயிறு விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் திவ்யா,மேலாளர் சுரேஷ் ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிறப்பான காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





