← முகப்பு

திருவண்ணாமலை அருகே அதிகாலை நேரத்தில் நேர்ந்த துயரம்

திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அருகே அதிகாலை நேரத்தில் நேர்ந்த துயரம்

பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கிக் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் அருகே வந்தபோது லாரியின் டயர் திடீரென பஞ்சரானதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநர் லாரியைச் சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியைக் கவனிக்காமல் வந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதியில் இருந்த நடத்துநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அலறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், காயமடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்செங்கம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்துக்குள்ளான அரசு பேருந்து திருவண்ணாமலை பணிமனையைச் சேர்ந்தது என்பதும், பேருந்தை செந்தில்குமார் (56) என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளநிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !