← முகப்பு

காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வுப் பேரணி.. அமைச்சர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைப்பு!

காஞ்சிபுரத்தில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான பேரணியைத் அமைச்சர்கள் தென்னரசு மற்றும் ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தனர்.

சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதில் மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, காவலன் கேட், கீரை மண்டபம், மேட்டுத் தெரு, மூங்கில் மண்டபம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்தும், இத்தகைய திருமணங்களைத் தடுப்பதில் பொதுமக்களுக்கு உள்ள பொறுப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !