கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளதால் அவரது வீட்டின் முன்பு தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Buy Now ! Pay Daily !
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீசார் அருள் விக்னேஷின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையை முன்னிட்டு எம்எல்ஏ வீட்டின் முன்பு போலீசார் திரண்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள உத்தரவு மற்றும் அதன் அடிப்படையில் காவல்துறை மேற்கொள்ள உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





