← முகப்புதிருநெல்வேலி →

படிக்கட்டில் இறந்து கிடந்த 5 மாத சிசு!

திருநெல்வேலி அருகே திருமணத்திற்கு முன்பே 5 மாத கர்ப்பமாக இருந்ததை மறைத்து வாலிபர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்த நிலையில், திருமணமான மறுநாளே வீட்டின் படிக்கட்டில் சிசு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

படிக்கட்டில் இறந்து கிடந்த 5 மாத சிசு!

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 13ம் தேதி வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் நெல்லையில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

இந்நிலையில், திருமணமான மறுநாள் (14-ம் தேதி) அதிகாலையில் புதுமணப் பெண்ணுக்கு திடீரெனக் கடுமையான வயிற்றுவலியும், அதிகப்படியான ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் குடும்பத்தினர், உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதற்கிடையே, வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் சுமார் 5 மாத வளர்ச்சியடைந்த சிசு ஒன்று இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் திருமணத்திற்கு முன்பே சுமார் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளதாகவும், தற்போது அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த உண்மையைத் திட்டமிட்டு மறைத்து, தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாக மணமகன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகன், நெல்லை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உண்மையை மறைத்துத் திருமணம் செய்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த இளம்பெண்ணின் கர்ப்பத்திற்குக் காரணமான நபர் யார்? இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு முன்பே தெரியுமா? என்பது குறித்து நெல்லை தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே நடந்த இச்சம்பவம் தாழையூத்து மற்றும் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !