குறுகிய நேரத்தில் கதையின் முக்கியமான திருப்பங்கள், உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வெர்ட்டிகல் சீரிஸ் வடிவம் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, மொபைல் போன்களில் எளிதாகப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்படும் இத்தகைய தொடர்கள், டிஜிட்டல் பொழுதுபோக்குத் தளங்களில் தற்போது அதிக கவனம் பெற்று வருகின்றன.
வழக்கமான தொடர்களிலிருந்து மாறுபட்டு, குறைந்த நேரத்தில் விறுவிறுப்பான கதையையும் அதன் முக்கிய அம்சங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது இவ்வடிவத்தின் தனிச்சிறப்பாகும்.அந்த வகையில், திரில்லர் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் ‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ (Ramnath's Untold Secrets) தொடரை ஜாம் சினிமாஸ் (Zam Cinemas) தயாரித்து வருகிறது. கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட சில ரகசியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரும்போது நிகழும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகிறது.
Buy Now ! Pay Daily !

இந்தத் தொடரை முத்து இயக்குகிறார். J.S.ராமநாதன் எழுதி, தயாரிக்க, மதன் முருகன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவுப் பொறுப்பை எழில்செல்வன் கவனிக்கிறார். தர்மா இசையமைக்கிறார், தமிழ் பிரகாஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மேலும் ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகியாகவும், கிருஷ் தயாரிப்புத் தலைவராகவும், சதீஷ் ஆறுமுகம் வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இந்த வெர்ட்டிகல் சீரிஸ்க்கான சென்னையில் இன்று (நவ.24) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்ததும் இத்தொடர் விரைவில் கோலோரா (Golora) டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. மர்மம் மற்றும் திரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த வெர்ட்டிகல் சீரிஸ் புதிய அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.






