← முகப்பு

இந்த வாரத்தில் மட்டும் '13' படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இந்த வார இறுதியில் 13 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், படங்களுக்கு சரியான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்குமா என தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் '13' படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்களை விட சிறிய பட்ஜெட் படங்களே அதிக வெற்றியை பெற்றுள்ளன.

குறிப்பாக மொத ராத்திரி, பத்தா, டோரதி போன்ற படங்கள் விமர்சனங்கள் மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றிகளின் மூலம் சிறிய பட்ஜெட் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அந்த வகையில் இந்த நவம்பர் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையான வரும் நவம்பர் 27, 2026 அன்று ஒரே நாளில் 13 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. நடப்பு ஆண்டில் ஒரு வாரத்தில் வெளியாகும் அதிகபட்சப் படங்களின் எண்ணிக்கை இதுவே ஆகும்.

ஏற்கெனவே கடந்த வாரம் திரைக்கு வந்த படங்களும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், புதிதாக வரும் இத்தனை படங்களுக்கும் போதிய திரையரங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 27-ஆம் தேதி வெளியீட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள 13 படங்களின் விவரம் பின்வருமாறு: 606, சிட்டுக்குறிஞ்சி,டெலிவரி பாய், கோ 2 கோ, ஜெடூசி, மதுர மோசடி, மின்னும் ஓர் இரவு, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, நிறம், வட மஞ்சுவிரட்டு, சிக்னல் அட் 11:30.

மொத்தமாக இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களை கணக்கில் கொண்டால், 2026-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200-ஐக் கடந்துவிடும்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 258 திரைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 50 படங்கள் குறைவாகவே திரைக்கு வந்துள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாத வெளியீடுகளையும் சேர்த்தால், 2026-ஆம் ஆண்டில் மொத்தமாக சுமார் 225 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !