இயக்குனர் சேரன் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’யார் சரி?’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் ஒருநாள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளவர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இடையே ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் மதுரையை சேர்ந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கலந்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரது நடிப்பு மற்றும் பொதுவெளியில் அவர் தன்னைத்தானே பெருமைப் பேசுவது போன்றவற்றை சுட்டிக்காட்டி இயக்குனர் சேரன் அறிவுரை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வந்தவர்களுக்கு தனது வளர்ச்சி மீது பொறாமை என்றும், தன்னை திட்டமிட்டு அவர்கள் மோசமாக விமர்சித்ததாகவும், சேரனுக்கே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சேரனையும் சேர்த்து கண்டித்து வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சைக்குள்ளான நிலையில், அந்த நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டாரை அவமானப்படுத்தும் நோக்கில் யாரும் பேசவில்லை என கூறி இயக்குனர் சேரன் நிகழ்ச்சியின் அன்கட் வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.
Buy Now ! Pay Daily !
மேலும் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சேரன் ” இதுவே உண்மையில் நடந்தது. அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார். முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம். ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது. சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா. இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன். ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான். அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன். இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா? அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்.
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே! கண்டிப்பே! அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை.






