← முகப்பு

தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது!

ஓம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது!

'லப்பர் பந்து' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். D56 என தற்காலிகமாக வைக்கப்பட்ட இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்குப் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அந்த நிகழ்வில் கோவிலுக்கு தனுஷ் சார்பில் 18 அடி நீளமுள்ள அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது. பூஜையில் எஸ். ஜே. சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினரும், ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

பூஜை வீடியோ வெளியிடப்பட்டபோது, இப்படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வத் தகவலும் அறிவிக்கப்பட்டது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !