மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் மலையாள பிரபலங்கள் நஸ்ரியா, நாஸ்லென், டொவினோ தாமஸ் இணைந்து நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சீன்.
இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸ்லில் வசூலை வாரி குவித்தது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் நடிகர் சூரியாவிற்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால், இத்திரைப்படம் கேரளாவிலும் நல்ல வசூலை எட்டியது.
Buy Now ! Pay Daily !
இந்த வருடத்தில் மட்டும் சூரியாவிற்கு கருப்பு, விஸ்வநாதன் அண்டு சன்ஸ் மற்றும் சீன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல்களைப் பெற்றுள்ள நிலையில், இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, உலகெங்கிலும் உள்ள தனது அன்பான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சூர்யா.
வீடியோவில் சூர்யா கூறியதாவது:
"எனது அன்பான பேன்ஸ் தம்பி தங்கைகளுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் எனது அன்பான நன்றிகளும் வணக்கங்களும்"
"என்னுடைய சீன் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடி, டீகோடிங் செய்து அலசி ஆராய்ந்து ஒரு வெற்றியை கொடுத்துள்ளீர்கள்"
"இதை எப்படி வார்த்தைகளால் கூறி நன்றி சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களது சீன் பட குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்"
"இந்த வருடத்தை மறக்க முடியாத அளவுக்கு மாற்றியதற்கு, திரையரங்க உரிமையாளர்களுக்கும், விமசர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும் தனது தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே நன்றியை தெரிவித்தார். சூர்யாவின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.





