தே.மு.தி.க கட்சியின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமாக உள்ளவர் எல்.கே.சுதீஷ். இவர் தே.மு.தி.க கட்சியின் தற்போதைய தலைவரான பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர். இவரது மூத்த மகள் ஜானு டாக்டராக இருந்து வருகிறார். ஜானுவுக்கும், ஓசூரை சேர்ந்த தொழிலதிபர் அகில் ரவிக்குமாருக்கும் தற்போது திருமணமாகியுள்ளது.
நேற்று சென்னையில் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் செண்டரில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமாத்துறையினர், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துக் கொண்டனர். இதில் நடிகை தேவயானியும், அவரது மகள்கள் பிரியா மற்றும் இனியா ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்கள் திரும்பும்போது அரசியல்வாதிகள் பலர் மேடை நோக்கி வந்துவிட்டதால் மேடை முழுவதும் பலர் முண்டியடித்துக் கொண்டும், நெருக்கிக் கொண்டும் இருந்துள்ளனர்.
Buy Now ! Pay Daily !
தேவயானி தங்களுக்கு வழிவிடுமாறு பௌன்சர்களிடம் கூறியும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நெருக்கியதால் தேவயானி கோபமடைந்ததாக கூறப்படுகிறது. அவர் கோபமாக பௌன்சர்களை கத்திவிட்டு தன் மகள்களை அழைத்துக் கொண்டு கோபமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதற்கு கருத்து தெரிவித்து வரும் பலர் திருமணங்களில் இதுபோல கூட்டமிருப்பது வாடிக்கைதான் என்றும், தேவயானி தேவையில்லாமல் கோபித்துக் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர் மேடையிலிருந்து வருவோர் இறங்கினால்தானே பிறர் ஏறிச் செல்ல முடியும். இரு பக்கமும் வழிவிட்டு செல்லாமல் பௌன்சர்கள் இடத்தை அடைத்துக் கொள்வது சரியில்லை என்றும் பேசி வருகின்றனர்.





