← முகப்பு

துப்பறிவாளன் படத்தை 5 பாகம் வரை எடுக்கலாம்னு இருந்தேன்! – இயக்குனர் மிஷ்கின்!

பிரபல இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், தனது துப்பறிவாளன் திரைப்படத்தை பல பாகங்களாக எடுக்கலாம் என திட்டமிட்டிருந்ததாகவும், விஷால் பிரச்சினையினால் அதை விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் படத்தை 5 பாகம் வரை எடுக்கலாம்னு இருந்தேன்! – இயக்குனர் மிஷ்கின்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து தனித்துவமான இயக்குனராக பெயரெடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். இவரது அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு என ஒவ்வொரு படமும் அவரது தனித்துவமான திரை மொழிக்காக இன்றும் கொண்டாடப்படுகின்றன. அதேசமயம் பிரபல ஹீரோக்களோடு மிஷ்கின் இணையும் படங்கள் பிரச்சினைக்கு உள்ளாவதும் நடக்கிறது. ஜீவா – மிஷ்கின் கூட்டணியில் வெளியான முகமூடி மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

விஷால் – மிஷ்கின் கூட்டணியில் உருவான ’துப்பறிவாளன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றபோதும், பின்னர் இருவருக்கு இடையேயான பிரச்சினையால் அந்த படத்தின் அடுத்த பாகத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். தற்போது மிஷ்கின் இயக்குனராக படம் எடுப்பதை விட நடிகராக படங்களை நடிப்பதில் பிஸியாகிவிட்டார். தற்போது ’சத்யவான் சாவித்ரி’ படத்தில் மார்க்கெண்டேயன் என்ற வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் ”தற்போது பல படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியையும், வரவேற்பையும் வைத்து இரண்டாம் பாகத்தையும் வெற்றிபெற செய்யலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் நான் ஒரு கதையை எழுதி அது நான் எடுத்த ஒரு படத்தின் அடுத்தக் கட்டமாக இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் என பெயரிடுவேன்.

துப்பறிவாளன் படத்திற்கு 2 முதல் 5 பாகங்கள் வரை என்னிடம் கதைக்கருக்கள் இருந்தன. ஆனால் விஷாலுக்கு எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டேன். இனி அதைத் தொடரும் எண்ணம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் ”ட்ரெயின் படத்தில் வரும் கதாப்பாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதை எப்படி செய்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !