← முகப்பு

‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ புரோமோ வெளியீடு!

‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ தொடரின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஜாம் சினிமாஸ் (Zam Cinemas / Zamorra Media & Entertainment) தயாரிப்பில் உருவாகி வரும் மர்மம் மற்றும் திரில்லர் நிறைந்த வெர்ட்டிகல் சீரிஸான ‘ராம்நாத்'ஸ் அன்டோல்ட் சீக்ரெட்ஸ்’ (Ramnath's Untold Secrets) தொடரின் புரோமோ வீடியோ இன்று (நவ. 24) மாலை வெளியாகியுள்ளது.

முன்னதாக, இத்தொடரின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் தொடங்கியது இந்நிலையில் இத்தொடரின் முன்னோட்ட (Promo) வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

புரோமோ எப்படி இருக்கிறது?

சுமார் 40 வினாடிகள் ஓடும் இந்த புரோமோ வீடியோ, தொடக்கம் முதலே திகிலும் மர்மமும் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேர நகரத்தின் இருள் சூழ்ந்த காட்சிகள், சாலையில் கிடக்கும் ரத்தக்கறை படிந்த கத்தி, இருளைக் கிழித்துக்கொண்டு வேகமாகச் செல்லும் பழைய அம்பாசிடர் கார் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் "நாம் அதைக் கண்டறியப் போகிறோம்... அங்கே சென்றடைவோம்" (We are going to find out... And we will reach there) என்ற வசனங்கள் தொடரின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

குறிப்பாக, தர்மாவின் மிரட்டலான பின்னணி இசை காட்சிகளுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. முத்து இயக்கும் இத்தொடருக்கு ஜே.எஸ்.ராமநாதன் (J.S.Ramanathan) கதை எழுதித் தயாரிக்கிறார். மதன் முருகன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், எழில்செல்வன் ஒளிப்பதிவாளராகவும், தர்மா இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

தமிழ் பிரகாஷ் படத்தொகுப்பைக் கவனிக்க, ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகியாகவும், கிருஷ் தயாரிப்புத் தலைவராகவும், சதீஷ் ஆறுமுகம் வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

மொபைல் போன்களில் எளிதாகப் பார்க்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த வெர்ட்டிகல் சீரிஸ், விரைவில் கோலோரா (Golora Play OTT) டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !