← முகப்புநாமக்கல் →

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு! ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை!

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில், ஆறு கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளது

கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு! ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை!

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,00 0க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 10 கோடி முட்டைக்கோழிகள் வாயிலாக தினசரி, எட்டு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற் பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கும், ஓமன் உள்ளிட்ட சில நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில், 90 சதவீதத்திற்கும் மேல், நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், 50 சதவீதம் ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தற்போது, இந்திய முட்டை இறக்குமதிக்கு, அந்நாடு முழுமையாக தடை விதித்துள்ளதால், முட்டை இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை யாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறுகையில், "நாமக்கல் பகுதியில், முழுமையான ‘பயோ செக்யூரிட்டி’ முறைகள் கடைப்பிடிக்கப்படுவதால், இங்கு பறவைக்காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள், நாமக்கல் மண்டலத்தை தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து, வேறு பகுதியில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் தென்பட்டாலும், இங்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !