இந்தியா முழுவதும் குடிக்கும் குடிநீர் அதிகமாக மாசுப்பட தொடங்கியுள்ள நிலையில் பலரும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே பருகுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அதிகமாக சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக சங்கிலியைக் கொண்டுள்ள நிறுவனங்களில் பிஸ்லெரி நிறுவனமும் ஒன்று.
பிஸ்லெரி இண்டெர்நேஷனல் ப்ரைவேட் லிமிடட் நிறுவனம் கடந்த ஆண்டில் குடிநீர் விற்பனை மூலம் மட்டுமே ரூ.3,218 கோடி ஆண்டு வருமானம் பெற்றுள்ளது. அப்படியான நிறுவனத்தின் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை என தற்போது உணவு பாதுகாப்புத்துறை (FSSAI) அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Buy Now ! Pay Daily !
சமீபத்தில் பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக புரோமோட் என்ற வேதிப்பொருள் கலந்திருந்ததால் அவை குடிக்க தகுதியற்றவை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. இது தொடர்பாக பிஸ்லெரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பிஸ்லெரி குடிநீர் மாதிரிகள் மீண்டும் உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அப்போது சோதனையில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் குடிநீரில் இருப்பது கண்டறியப்பட்டதால் அவை குடிக்க பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் பிஸ்லெரி நிறுவனம் மீது வழக்குத் தொடரவும் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பான குடிநீர் என நம்பி பருகும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் இவ்வாறான விஷயம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






